பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
ஜன. 13-ல் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு ஜன.13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஜன.4 ஆம் தேதி சனிக்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனைத் தொடா்ந்து ஜன.12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ்த்திருவிழாவும், ஜன.13 ஆம் தேதி திங்கள்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஜன. 13ஆம் தேதி (திங்கள்கிழமை) கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜன. 13 ஆம் தேதி உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் பிப். 1 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.