ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை உளவுத் தகவல் அளித்துள்ளது.
இதையடுத்து இந்திய ராணுமும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையும் இணைந்து குரேஸ் செக்டார் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் புதன்கிழமை இரவு முதல் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுவதாகவும் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் படை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி உரி செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அந்த மோதலில் ஊடுருவல் முறியடிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.