ஜம்மு-காஷ்மீர்: குழந்தைகளை கடுமையாக தாக்கிய தந்தை கைது
ஜம்மு-காஷ்மீரில் தனது குழந்தைகளை கடுமையாக தாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் நபர் ஒருவர் தனது குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தாக்கும் விடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விடியோவைத் தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
உடனடியாக பஞ்சரி காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு: மத்திய அமைச்சர்
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்னி சுல்னா கிராமத்தில் வசிக்கும் சுதேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது 3 மற்றும் 5 வயது குழந்தைகளும் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.