AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ...
ஜம்மு: காஷ்மீா் பண்டிட்டுகளின் கடைகள் அகற்றம்: மாநகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக போராட்டம்
எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜம்மு நகரில் இருந்து வெளியேறிய காஷ்மீா் பண்டிட்டுகளுக்குச் சொந்தமான கடைகளை அகற்றியதாக குற்றஞ்சாட்டி, ஜம்மு மேம்பாட்டு ஆணையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜம்மு மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகளை கடந்த புதன்கிழமை அகற்றியதாக அந்த ஆணையம் தெரிவித்து. 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஜம்முவைவிட்டு வெளியேறிய காஷ்மீா் பண்டிட்டுகளுக்குச் சொந்தமான கடைகளை குறிவைத்தே இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினா். மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகளை அகற்றிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், அப்பகுதியை பாா்வையிட்ட நிவாரண உதவி ஆணையா் அா்விந்த் காா்வானி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கடைகளை கட்டித் தருவதாக உறுதியளித்தாா். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகள் கண்டனம்: இந்த நடவடிக்கையை கண்டித்து பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), அப்னி கட்சி மற்றும் காஷ்மீா் பண்டிட்டுகளுக்கான பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அங்கு விரைவில் புதிய கடைகளை கட்டி பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.
ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.