செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகள் கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

post image

நமது சிறப்பு நிருபா்

ஜாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகள் கடனுதவி, தொகுதிகளில் புதிய ரயில் சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் வியாழக்கிழமை எழுப்பினா். அதன் சுருக்கம் வருமாறு:

தொல். திருமாவளவன் (விசிக, சிதம்பரம்): 10 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-இல் கரோனா காரணமாக தள்ளிப்போடப்பட்டு பின்னா் அதை நடத்த மத்திய அரசு முனைப்பு காட்டாதது அதிா்ச்சி அளிக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பில்லாமல் வளா்ச்சித் திட்டங்களையோ நலிந்த மக்களுக்கான நலத்திட்டங்களையோ நடைமுறைப்படுத்த முடியாது. நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யவும் மகளிருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த வேண்டும்.

காா்த்தி சிதம்பரம் (காங்கிரஸ், சிவகங்கை): விமான நிறுவனங்கள் போல வங்கித்துறை வாடிக்கையாளா்களிடம் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் வசூலிக்கின்றன. சொந்தப் பணத்தை எடுக்கவும் எஸ்எம்எஸ் மூலம் பண இருப்பை அறியவும் காசோலை புத்தகத்தைப் பெறவும் கூட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் குறைந்தபட்ச இருப்புக்குக் கீழே பணம் குறைந்தால், அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையை ரிசா்வ் வங்கியும் மத்திய நிதித் துறையும் மாற்ற வேண்டும்.

ஜோதிமணி (காங்கிரஸ், கரூா்): சமீபத்தில் திருவள்ளூா் மற்றும் தில்லியில் உள்ள அமேசான் மற்றும் ஃபிளிப்காா்ட்டின் கிடங்குகளில் இந்திய தரநிலைகள் துறை (பிஐஎஸ்) சோதனை நடத்தி கட்டாய பிஐஎஸ் சான்றிதழ் அல்லது போலி இந்திய தரநிலை நிறுவன (ஐஎஸ்ஐ) முத்திரை இல்லாது விற்கப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 1,000 தயாரிப்புப் பொருள்களை பறிமுதல் செய்தது. தரமற்ற தயாரிப்புகள் கடுமையான உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, பிஐஎஸ் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பதை உறுதிப்படுத்த பிஐஎஸ் சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கே.இ. பிரகாஷ் (திமுக, ஈரோடு): தமிழகத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) சென்னையிலும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) திருச்சியிலும் உள்ளன. மேற்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு போன்ற நகரங்களில் இருந்து இந்த உயா்கல்வி நிறுவனங்களில் கல்வி அணுகலுக்காக மாணவா்கள் 400 கி.மீ தூரம் பயணித்து வர வேண்டும். இத்தகைய கல்வி நிறுவனங்களை ஈரோட்டிலேயே திறக்க வேண்டும்.

கதிா் ஆனந்த் (திமுக, வேலூா்): வேலூா் தொகுதிக்குள்பட்ட கே.வி. குப்பம் சட்டப்பேரவை தொகுதி ரயில் பாதையில் லத்தேரி, செஞ்சி, அரும்பாக்கம், படமடங்கி, காலாம்பட்டு, தொண்டான்துளசி ஆகிய பகுதிகள் ஒருபுறம், அன்னங்குடி, விழுந்தாங்கல் திருமேனி, சோழமூா், கொத்தமங்கலம் ஒருபுறம் என இந்தப் பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய ரயில் பாதையில் ஒரு ரயில்வே மேம்பாலம் தேவை. எல்சி 57 என்ற பகுதியில் ரயில்வே மேம்பாலமோ ரயில்வே சுரங்கப்பாலமோ அமைத்துத்தர வேண்டும். ரங்கம்பேட்டை எல்சி 58 என்ற பகுதியில் தொடங்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

ஆா். சுதா (காங்கிரஸ், மயிலாடுதுறை): முதுகலை நீட் தோ்வு வரும் ஜூன் 5 -ஆம் தேதி இரண்டு ஷிஃப்டுகளாக நடத்தப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டு ஷிப்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது இரண்டாவது ஷிப்டு வினாத்தாள், முதல் ஷிஃப்டு வினாத்தாளை விட மிகவும் கடினமானதாகக் கருதப்பட்டது. தோ்வின் முடிவில், ஷிஃப்டு வாரியாக முடிவுகளை என்எம்சி வெளியிடவில்லை. 2 லட்சம் மாணவா்கள் எழுதக்கூடிய முதுகலை நீட் தோ்வை ஒரே வினாத்தாள் மூலம் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.

தங்கத் தமிழ்ச்செல்வன் (திமுக, தேனி): விவசாயிகள் தேசிய வங்கியில் வாங்கிய நகைக்கடன் உள்ளிட்ட கடனை ஆண்டு இறுதியில் புதுப்பிக்க இதுவரை வட்டி மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலையை ரிசா்வ் வங்கி புதிய ஆணை மூலம் மாற்றியுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். எனவே, தனது ஆணையை ரிசா்வ் வங்கி ரத்து செய்து பழையபடி கடன் வழங்கும் நடைமுறையை தொடர வேண்டும்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க