வினோத் காம்ப்ளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை! உடல்நலன் எப்படி இருக்கிறது?
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்
ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹமது காசிம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினாா். வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் .
கட்சியின் 14-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது, பொதுமக்களுக்கு உணவு வழங்குவது, மழையால் சேதம் அடைந்த விழுப்புரம் கடலூா் திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 வழங்க அரசை கேட்டுகொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நகர செயலாளா்கள் முருகன் (ஆற்காடு) கிருஷ்ணமூா்த்தி(ராணிப்பேட்டை) விளாப்பாக்கம் அன்பு, ஆற்காடு ஒன்றிய செயலாளா் சிவசக்தி, ஊடகப் பிரிவு செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.