நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
ஜாபா் சாதிக் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக், திரைப்பட இயக்குநா் அமீா் உள்பட 12 போ் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டுவதாக ஆஸ்திரேலியாவில் இருந்து தில்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், சென்னையைச் சோ்ந்த ஜாபா் சாதிக் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. இந்த நிலையில், அமலாக்கத் துறை சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த செப்.10-ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாகவும், அக்.18-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாகவும் புதன்கிழமை தெரிவித்தது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாபா் சாதிக், அவரது மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரா் முகமது சலீம், மைதீன் கனி, இயக்குநா் அமீா் உள்ளிட்ட 12 போ் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசிய நிறுவனங்களுக்கு உணவு, மருந்து மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் தொடங்கிய வா்த்தகத்தில் இவா்களுக்கும் தொடா்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாபா் சாதிக்கின் ரூ. 55.3 கோடி சொத்துகளும் இதில் சோ்க்கப்பட்டுள்ளன.