செய்திகள் :

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சர்

post image

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் யாதவ் எழுப்பிய கேள்விக்கு வருவாய் மற்றும் நில சீர்திருத்தத் துறை அமைச்சர் தீபக் பிருவா பதிலளித்தார்.

அடுத்த நிதியாண்டில் சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்களால் முடிந்த அனைத்தை முயற்சிகளையும் செய்வோம். பணியாளர் துறை ஏற்கனவே இந்தப் பணியை மேற்கொள்ள ஒரு நோடல் நிறுவனத்தை நியமிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்தாண்டு பிப்ரவரியில் ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்காக, மார்ச் 4ஆம் தேதி துறை ஒரு நிறுவனத்தை பணியமர்த்த ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.

இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வ... மேலும் பார்க்க

யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!

ஹரியாணாவில் 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரியாணா ரோட்டாக் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வ... மேலும் பார்க்க

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை!

உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை நம்பியோ வெளியிட்டுள்ளது.உலகளவில் குற்றங்களின் நிலை, பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் முதலானவற்றை மதிப்பிட்டு, பாதுகாப்பான நாடுகள் குறித்... மேலும் பார்க்க

2,000 நகரங்களில் புதிய சேவையைத் தொடங்கும் ஏர்டெல்!

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுவரும் ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சிப் பிரியர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான படங்கள், இணையத் தொடர்களை கண்டுகளிக்கும் வகையில் ஐபிடிவி என்ற புத... மேலும் பார்க்க

உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்: 3 மாதங்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

ஹரியாணாவில் யோகா ஆசிரியர் ஒருவர் காணாமல் போனதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதுடைய ஜக்தீப், கல்வி நிறுவனம் ஒன்றில் யோகா ஆசி... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஜாமீன் பெற்ற லாலு பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருது?

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.பிகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் ரயில்வே அ... மேலும் பார்க்க