'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
ஜார்க்கண்ட்: ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயம்
ஜார்க்கண்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை பயணித்த ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
தொழிலாளர்கள் அனைவரும் தகுரா கிராமத்தில் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பாலம் அருகே ஆட்டோ கவிழ்ந்தது.
மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? செந்தில் பாலாஜி பதில்!
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த ஏழு தொழிலாளர்கள், முதன்மை சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.