WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன | IPS Finance - 260 | Vikatan
ஜீவா - 46: மீண்டும் இணையும் பிளாக் கூட்டணி!
நடிகர் ஜீவா பிளாக் படத்தை இயக்கிய இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தவருக்கு கற்றது தமிழ், ஈ, ரௌத்திரம், என்றென்றும் புன்னகை படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவுக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. இறுதியாக, கடந்த 2024-ல் வெளியான பிளாக் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், ஜீவா தன் 46-வது படமாக பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் பூஜை இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் பலி!