செய்திகள் :

ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? -ரஜினி விளக்கம்

post image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ’ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்டக் காட்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காணொலியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் பேசியதாவது:

”பாட்ஷா திரைப்பட விழாவில் ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக இருந்த அவரை வைத்துக் கொண்டு அதுபற்றி பேசியிருக்கக் கூடாது. ஆனால், அன்றைய சூழலில் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். இதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.

இது தெரிந்தவுடன் என்னால் இப்படி நடந்துவிட்டதே என்று எண்ணி, என்னால் தூங்கக்கூட முடியவில்லை. ஆனால், அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு என்னிடம் பேசினார். எனது மனதில் இது எப்போதும் இருந்தது.

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடன் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார். இவர்தான் ரியல் கிங் மேக்கர்.” எனத் தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் மக்களுக்கு அனுமதி!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க