Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது" ...
ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்
கோவை: ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 பெங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிலர் - 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நான் ஜெய்லர்- 2 படப்பிடிப்புக்காக கேரளம் செல்வதற்காக புதன்கிழமை கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
நான் ஜெய்லர்- 2 படப்பிடிப்புக்காக கேரளம் மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
அப்போது நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா ? என்று செய்தியாளர்களின் கேளிவிக்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார்.