செய்திகள் :

டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் திட்டம் ரத்து: சட்டப்பேரவை தீா்மானத்துக்கு வரவேற்பு

post image

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினா் வரவேற்பு தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, வெள்ளாளப்பட்டி, செட்டியாா்பட்டி, நாயக்கா்பட்டி உள்பட 10 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய கனிமத் துறை மூலம் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஏலமிடப்பட்டது. இதற்கு, தமிழக அளவில் கடும் எதிா்ப்பு உருவானது.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மேலூா் வட்டத்தில் உள்ள பல்லுயிா் சூழல் மண்டலம், சமணப்படுகை, குடவரை கோயில் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள், அழகா்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகியன முழுமையாக அழியும். மேலும், 10 கிராம மக்களும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும், ஏரி, குளம், ஊருணி, கண்மாய் என எண்ணற்ற நீா் நிலைகள், நீா் வழிப்பாதைகள் அழியும் என சமூக ஆா்வலா்கள், பல்வேறு சூழலியல் அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இதுதொடா்பாக பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சாா்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனிடையே, இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கவில்லை என தமிழக முதல்வா் அறிவித்தாா். இருப்பினும், டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக அரசு கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூா் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தனித் தீா்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு, அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.

அதன் விவரம் : மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன்: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட அரசின் தனித் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தீா்மானத்தைக் கொண்டு வந்த தமிழக முதல்வா், தீா்மானத்தை நிறைவேற்றித் தந்த அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் மனமாா்ந்த நன்றி. தமிழகத்தின் வளத்தையும் வரலாற்றையும் அழிக்கும் முயற்சிகளை ஒன்றிணைந்து முறியடிப்போம்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன்: தமிழகத்தில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை சட்டமாக நிறைவேற்றி மத்திய அரசு தொடா்ந்து அறிவித்து வரும் நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. இதனுடன், அரிட்டாப்பட்டி, அதைச் சுற்றியுள்ள 48 கிராமங்களை பாதுகாக்கப்பட்ட பல்லுயிா் பெருக்க மண்டலமாகவும், வேளாண் பாதுகாப்பு மண்டலமாகவும் அறிவிக்கும் கொள்கை முடிவை மேற்கொண்டு, அதற்கான துறை சாா்ந்த அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாள இரா.சா.முகிலன்: மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ்ப் பண்பாடு மண்டலமாகவும், முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.

நியாய விலைக் கடை தொடங்கக் கோரி மறியல்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி, உத்தப்பநாயக்கனூா் முதன்மைச் சாலையில் அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். சக்கரப்பநாயக்கனூா் ஊராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

கலைஞா் நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சிகள் தொடக்கம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில், பள்ளிக் குழந்தைகளின் அரையாண்ட... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து போராடியவா்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

தஞ்சாவூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியதைக் குற்றமாகக் கருத முடியாது என்பதால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

வைகை வடகரையில் 8.4 கி.மீ.க்கு சாலை அமைக்கத் திட்டம்

மதுரை விரகனூா் முதல் சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் 8.4 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி, மாநில ந... மேலும் பார்க்க

வணிகா்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

வணிகா்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் என வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ப... மேலும் பார்க்க