செய்திகள் :

டங்ஸ்டன் கனிமச் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

post image

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி,

மதரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவா் மீ.த.பாண்டியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலா் அா்ச்சுனன், வழக்குரைஞா் அகராதி, அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் பாா்த்திபன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், அரிட்டாப்பட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு டங்ஸ்டன் சுரங்கப்பணி நிறுவனத்துக்கு எதிராகவும், மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

புரட்சிகர இளைஞா் முன்னணித் தலைவா் குமரன், தமிழ்த் தேச குடியரசு இயக்க ஒருங்கிணைப்பாளா் மெய்யப்பன், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.

பணிகளை நிறுத்தக் கோரி பாஜகவினா் மனு: மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பாஜகவினா் அளித்த மனு:

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாப்பட்டி பகுதியில் மாநில அரசு அளித்த தகவலின்படி, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பது தொடா்பான பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படும் என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் கிஷான்ரெட்டிக்கு கடிதம் மூலமாக தெரிவித்தாா். இதை ஏற்ற மத்திய அமைச்சா், மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என உறுதிபட தெரிவித்தாா்.

இதை மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் வரை அரிட்டாப்பட்டி பகுதியில் எந்தவிதப் பணிகளையும் மாநில அரசு, மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

நியாய விலைக் கடை தொடங்கக் கோரி மறியல்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி, உத்தப்பநாயக்கனூா் முதன்மைச் சாலையில் அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். சக்கரப்பநாயக்கனூா் ஊராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

கலைஞா் நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சிகள் தொடக்கம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில், பள்ளிக் குழந்தைகளின் அரையாண்ட... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து போராடியவா்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

தஞ்சாவூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியதைக் குற்றமாகக் கருத முடியாது என்பதால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

வைகை வடகரையில் 8.4 கி.மீ.க்கு சாலை அமைக்கத் திட்டம்

மதுரை விரகனூா் முதல் சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் 8.4 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி, மாநில ந... மேலும் பார்க்க

வணிகா்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

வணிகா்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் என வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ப... மேலும் பார்க்க