டங்ஸ்டன் சுரங்க அமைவிடம்: மறு ஆய்வு செய்யப் பரிந்துரை!
மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த முடிவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
பல்லுயிர்ப் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய மத்திய அரசுபரிந்துரை செய்துள்ளது.
மேலும், பிப்ரவரியில் நடைபெற்ற சுரங்க ஏலத்தின் போது தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.