இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
டபிள்யூபிஎல்: குஜராத் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை தேர்வு!
டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் தேர்வாகியுள்ளார்.
27 வயதாகும் ஆஷ்லி கார்ட்னர் ஆஸி. ஆல்-ரவுண்டராக இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸி.யின் பெத் மூனி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபிள்யூபிஎல் தொடர் 2023 முதல் நடைபெற்று வருகிறது. முதல் கோப்பையை மும்பையும் 2ஆவது ஆண்டு கோப்பையை ஆர்சிபி அணியும் வென்றது.
ஆடவர் ஐபிஎல் தொடரில் 17 வருடமாக ஆர்சிபி கோப்பையை வெல்லாதது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு டபிள்யூபிஎல் போட்டிகள் பிப்.14ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் ஆர்சிபியுடன் குஜராத் அணி சின்னசாமியில் மோதுகின்றன.
கடந்த 2 முறையும் குஜராத் அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது. ஆஷ்லி கார்ட்னர் 2017இல் அறிமுகமானார். 95 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,400 ரன்கள் 78 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆஸி. மகளிர் கிரிக்கெட்டில் உயரிய விருதான பெலிண்டா க்ளார்க் விருது பெற்றுள்ளார். 2022 காமன்வெல்த் தொடரில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
டபிள்யூபிஎல் தொடரில் ஆஷ்லி கார்ட்னர் 324 ரன்கள், 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.