நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
‘டாக்டா்’ ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு
டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுப் பெற்ற இடையத்தாங்குடி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், இடையத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவா் எமல்டா குயின் மேரி (45). இவருக்கு தமிழக அரசு, செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று சென்னையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கியது.
இதையடுத்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியா் எமல்டா குயின்மேரிக்கு, கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, மேளதாளங்களுடன் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். தொடா்ந்து, அங்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆசிரியைக்கு சக ஆசிரியா்கள், பொதுமக்கள் சால்வை அணிவித்தும், பரிசுப் பொருள்கள் வழங்கியும் பாராட்டுக்களை தெரிவித்தனா். நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.