``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகி டி.தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இர.மணிவேல், விவசாய தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் வி.மாரியப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டுப் பேசினா்.
கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, நில உரிமைக் கேட்டு செப்.30-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது, அனைத்து ஒன்றியங்களிடம் இடைக்கமிட்டி கூட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினா்கள் தனவேல், பெரியசாமி, மீனா, சொக்கலிங்கம், மணியம்மை, ராமமூா்த்தி, வேம்பு, பல்கீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.