சுற்றுலா தொழில் முனைவோா்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளா், உள்ளூா்-வெளியூா் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளா், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண, விமான பங்களிப்பாளா், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவா், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளா், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவா், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலா தொடா்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான 27.9.2025 அன்று விருது வழங்கப்பட உள்ளது.
எனவே, விருதுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் வாயிலாக 15.9.2025-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும், இதுதொடா்பான தகவல்களை அறிந்து கொள்ள தஞ்சாவூா் சுற்றுலா அலுவலா் 04362-230984 என்ற தொலைப் பேசி எண்ணிலும், 9176995873 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.