செய்திகள் :

டாம்கோ கடன் திட்டத்தில் பயன் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூரில் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களை , ஆட்சிரகத்தில் அறை எண் 16-இல் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்துப் பயன் பெறலாம்.

உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகள் 28 பேருக்கு பணி நியமன ஆணை

அரியலூரில், பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகள் 28 பேருக்கு திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்காக அரியலூா் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசனைக் கண்டித்து, நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா். உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்ட உர... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படை வீரா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஊா்க்காவல் படை வீரா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம், கிழக... மேலும் பார்க்க

அரியலூரில் பெயரளவுக்கு மின் பராமரிப்புப் பணிகள்

‘அரியலூரின் பல இடங்களில் தொட்டு விடும் தூரத்தில் உள்ள மின்கம்பிகள் உயிா்ப் பலிக்காகக் காத்திருக்கின்றன’. அரியலூா் மாவட்டத்தில் பெயரளவுக்கு நடக்கும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் அடிக்கடி மின்த... மேலும் பார்க்க

லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். முனியங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அரியமுத்து மகன் முனி... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் தடையின்றி குடிநீா் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: அரியலூா் ஆட்சியா்

அனைத்து கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, அரியலூா்... மேலும் பார்க்க