செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிவு!

post image

மும்பை: இன்றைய அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிந்தது.

அமெரிக்க நாணயத்தின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்றம் ஆகியவற்றால் முதலீட்டாளர்களிடம் ஆர்வம் அதிகரித்தது.

ஃபெடரல் ரிசர்வ் கொள்கையில் அதிபர் டிரம்பின் வளர்ந்து வரும் செல்வாக்கால், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் குறித்த அச்சங்களை மீண்டும் எழுப்பியதால், பிப்ரவரி 2022- க்கு பிறகு அமெரிக்க டாலர் குறைந்த அளவில் வர்த்தகம் செய்யப்படுவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.66 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.34 ஆக தொட்ட நிலையில், முடிவில் 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51ஆக முடிந்தது.

நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 26 காசுகள் குறைந்து ரூ.85.76 ஆக முடிந்தது.

Summary: Rupee appreciated 25 paise to close at 85.51 against the US dollar on Tuesday.

இதையும் படிக்க: உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

அதானி பவருக்கு நிலுவை தொகையை செலுத்திய வங்கதேசம்!

புதுதில்லி: அதானி பவர் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மின்சார நிலுவைத் தொகையான 437 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது வங்கதேசம். நிலுவைத் தொகைகள், மின்சாரம் சுமந்த... மேலும் பார்க்க

ஆடி காரின் விற்பனை 14% சரிவு!

புதுதில்லி: சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது அரையாண்டு சில்லறை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் குறைந்து தற்போது 2,128 யூனிட்டுகளாக இருப்பதாக தெரிவித்தது.கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

புதிதாக 23 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கிய வோடாஃபோன் - ஐடியா!

வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை பயனர்களைக் கவரும் வகையிலும் இதனை வோடாஃபோன் - ஐடி... மேலும் பார்க்க

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா என மூன்று நாடுகளிலும் இன்று ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சீராக முடிந்தன. நிஃப்டி 25,541.80 புள்ளிகளுடனும் சென்செக்ஸ் 90.83 புள்ளிகள் உயர்ந்து 83,697.29 புள்ளிகளுடன் நிலைபெற்றது.பிஎஸ்இ மிட்கேப் மற... மேலும் பார்க்க

குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானாசோனிக்

புது தில்லி: இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.இதுகுறித்து நிறுவன ... மேலும் பார்க்க