பாகிஸ்தான் கார் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி, 32 பேர் படுகாயம்; பின்னணி என்ன?
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக நிறைவு!
மும்பை: உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தொடர்ந்து அந்நிய நிதி வெளியேறி வருவதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக முடிவடைந்தது.
இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், ரூபாய் மதிப்பு சரிவை தடுத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் முடிவுக்காக பங்குச் சந்தைகள் காத்திருக்கின்றன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.88.69 முதல் ரூ.88.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 4 காசுகள் உயர்ந்து ரூ.88.79ஆக நிறைவடைந்தது.
நேற்று திங்கள்கிழமை இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைக்கப்பட்டு 3 காசுகள் குறைந்து ரூ.88.75 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: அந்நிய முதலீடு தொடர் வெளியேற்றம்: 97 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!