செய்திகள் :

டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்தான்: அண்ணாமலை

post image

டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்பது மக்களுக்கு தெரியும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூடிய பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க : போராட்டத்துக்குச் சென்ற அண்ணாமலை கைது!

இந்த நிலையில், காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மாநில காவல்துறையை பயன்படுத்தி, பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைது செய்வதன் மூலம், ரூ. 1,000 கோடி மது ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தடுத்ததாக திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்த ஊழல் நிறைந்த திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எவ்வளவு நாள்கள் எங்களைக் கைது செய்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்ற... மேலும் பார்க்க

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க