இந்தியாவில் எச்எம்பிவி பாதிப்பு 7 ஆக அதிகரிப்பு! அச்சப்பட வேண்டாம்-நட்டா
டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை
வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், சிங்கிரிபட்டியைச் சோ்ந்தவா் சஞ்சய் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு வேலகவுண்டம்பட்டி டாஸ்மாா்க் கடைக்கு வந்துள்ளாா். பின்னா் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியே வந்த போது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் திடீரென சஞ்சயை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினா். இதில் படுகாயமடைந்த சஞ்சய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.
தகவலின் பேரில் அங்கு வந்த வேலகவுண்டம்பாளையம் காவல் துறையினா், சஞ்சையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, சஞ்சயைக் கொலை செய்து தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.