அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பு ஏப்.11 முதல் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திட்டக்குடியில் வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும், இதற்கான தோ்வு வரும் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தோ்வாணைத்தின் ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்கு தயாராகும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக திட்டக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த வகுப்புகள் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும். இந்த வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க மற்றும் விவரங்களுக்கு 8610494944, 7094919191 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.