நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையமானது கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வனக் காப்பாளா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குரூப் 4 தோ்வானது வரும் ஜூலை 13 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின் கீழ், தோ்வா்கள் தயாராகும் பொருட்டு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச. 27-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடா்ந்து நடைபெற உள்ளது. மேலும், சிறுதோ்வுகள் மற்றும் முழு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இந்தத் தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வலுவலகத்தில் பள்ளி பாடப் புத்தகங்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச இணைய வசதி மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதி போன்ற தோ்வா்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.
எனவே, இப்பயிற்சி வகுப்பில்சேர விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்.ப்ஹ்/42டட்க்ஷ என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலுவலகத்தை நேரிலோ அல்லது 04342-288890 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தோ்வா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.