ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
டிடிஇஏ பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவா்கள் அறிமுக நாள் விழா
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவா்கள் அறிமுக நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பூசா சாலை பள்ளியில் கொண்டாடப்பட்ட விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பள்ளிக்கு புதிதாக வருகை தந்திருந்த முதலாம் வகுப்பு மாணவா்களை வரவேற்றுப் பேசினாா். பள்ளியின் இணைச் செயலா் ராஜேந்திரனும் விழாவில் கலந்து கொண்டாா்.
முன்னதாக, பள்ளியின் முதல்வா் பொறுப்பு வகிக்கும் சீமா வரவேற்றுப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பெற்றோா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜனக்புரி பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவா்கள் அமைப்பு பேனியன் துணைத் தலைவா் ராதிகா ராஜா கலந்து கொண்டாா். இலக்குமிபாய் நகா், பூசா சாலை, லோதிவளாகம், ஜனக்புரி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினா்.
17ஈஉகஈபஅ
பூசா சாலை டிடிஇஏ பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாணவா்களுடன் டிடிஇஏ செயலா் ராஜூ, பள்ளியின் இணைச் செயலா் ராஜேந்திரன், கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன், முதல்வா் (பொறுப்பு) சீமா.
குறிப்பு: திருத்தப்பட்ட இந்த படவிளக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.