செய்திகள் :

டிடி நெக்ஸ்ட் லெவல் டப்பிங் புரோமோ..! ரிலீஸ் எப்போது?

post image

நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது.

தற்போது, டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரேம் ஆனந்த இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் டப்பிங் பணிகளை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். அதன் புரோமோ விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப்படம் மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்மூட்டியின் புதிய பட அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நடிகர் மம்மூட்டி கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம்... மேலும் பார்க்க

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள் - புகைப்படங்கள்

நாடு முழுவதும் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.2025 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இந்தியா முழுவதும் 7,842 மையங்களில் நடைபெற்றது.விதிமீறல்களில் ஈடுபடும் மா... மேலும் பார்க்க

காதலர் தினம் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.காதலர் தினத்தன்று பூங்கொத்து மற்றும் பலூன்களை வைத்திருக்கும் இளம் பெண்.மும்... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் படத்தின் ’மண்ட பத்திரம்’ பாடல் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்... மேலும் பார்க்க

'காதல்', 'கவிதை': சினேகன் குழந்தைகளுக்கு கமல் சூட்டிய பெயர்!

பாடாலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.தமிழ் சி... மேலும் பார்க்க