டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரேம் ஆனந்த இயக்கிய இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் காட்சிகள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.