ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரேநாளில் 208 பில்லியன் டாலர் இழப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பில் சரிவு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பையடுத்து, பில்லியனர்களின் சொத்துமதிப்பு ஒரே நாளில் கணிசமான சரிவைக் கண்டது. பில்லியனர்களின் செல்வத்தைக் கணிக்கும் ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் ஒரே நாளில் 208 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டதாகக் கூறுகிறது.
இவர்களில் முன்னவராக மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உள்ளார். டிரம்ப்பின் அறிவிப்பால், மெட்டா பங்குகள் 9 சதவிகித சரிவு ஏற்பட்டு, மார்க் ஸக்கர்பெர்க்கின் நிகர சொத்துமதிப்பில் 17.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அவருக்கு அடுத்ததாக, அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸின் சொத்துமதிப்பு, 15.9 பில்லியன் டாலர் சரிவைக் கண்டது.
மூன்றாவது இடத்தில், டிரம்ப் அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் தலைவரான எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகளும் 5.5 சதவிகிதம் வீழ்ச்சியுடன், அவருக்கு 11 பில்லியன் டாலர் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, செல்வ இழப்பு ஏற்பட்ட முதல் 10 பேரில் 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே.
மேலும், எஸ் & பி 500 பங்குச்சந்தை 4.8 சதவிகிதம் சரிவடைந்தது; இது மற்ற பங்குச்சந்தைகளைவிட அதிகம். எஸ் & பி 500 பங்குச்சந்தை நிறுவனங்கள் மொத்தமாக 2.4 டிரில்லியன் டாலர் பங்குச்சந்தை மதிப்பை ஒரே நாளில் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!