செய்திகள் :

டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு! வெள்ளை மாளிகை

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் (வயது 79), இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் அதிபரானது முதல் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தலைப்புச் செய்தியில் இடம்பெற்று வருகிறார்.

இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்த புகைப்படமும் பேசுபொருளானது.

இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

நரம்பு நோயால் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:

“சமீபத்தில் அவரது கால்களில் வீக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ரத்த நாள சோதனை உள்பட விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்ப்ரின் மாத்திரிகளை டிரம்ப் எடுத்துக் கொள்வதால், அடிக்கடி பிறருடன் கைகளைக் குலுக்குவதால் ஏற்படும் திசு சேதத்தால் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

தீவிரமான நரம்பு பிரச்னை எதுவும் இல்லை, அனைத்து பரிசோதனை முடிவுகளும் சரியான வரம்புக்குள் இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”70 வயது மேற்பட்டவர்களுக்கு இதுபோன்ற நரம்பு பிரச்னை வருவது சாதாரணமானது. கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், டிரம்புக்கு இதய செயலிழப்பு, சிறுநீரகப் பிரச்னை அல்லது வேறெந்த நோய்க்கான அறிகுறியும் இல்லை.

டிரம்ப் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருகிறார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள்பட்ட சிரை குறைபாடு என்றால் என்ன?

அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கண்டுபிடிக்கப்பட்ட நரம்பு பிரச்னை நாள்பட்ட சிரை குறைபாடு (chronic venous insufficiency) என்று அழைக்கப்படுகிறது

ஈர்ப்பு விசைக்கு எதிராக கால்களில் இருந்து ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் மேல்நோக்கி செல்கிறது. நாள்பட்ட சிரை குறைபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சரியாக செல்லாமல், மூட்டுப் பகுதிகளில் ரத்தம் தேங்கி வீக்கமடைகிறது.

இது தீவிரமான பிரச்னை இல்லை என்றும் வயதானவர்களுக்கு வரும் பொதுவான பிரச்னை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வயதானவர்களில் 10 முதல் 35 சதவிகிதம் வரையிலானவர்கள் இந்தப் பிரச்னையை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

US President Donald Trump has been diagnosed chronic venous insufficiency, the White House has announced.

இதையும் படிக்க : கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்று... மேலும் பார்க்க

கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதானதால், அவர் டாக்ஸி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் இன்று (ஜூலை 18) செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் ம... மேலும் பார்க்க

டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?

அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான, புதிய அமெரிக்க தூதருக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பன்முகக் கலாசாரம் மற்றும் பெரும்பான்மையான ... மேலும் பார்க்க

செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?

இலங்கை நாட்டின், கொழும்புவில் உள்ள செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் யார்? பள்ளிச் சிறுமிகளா? ... மேலும் பார்க்க

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கத் திட்டம்!

பிரிட்டனில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு பிரிட்டன் பொதுத் தேர்தலின்போது, தொழிலாளர் கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றா... மேலும் பார்க்க

ரஷியா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மீட்கும் ரஷிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) முத்தரப்பு ஒத்துழைப்பை மீட்டெடுக்க ரஷியா எடுத்துள்ள முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ‘இந்த ஒத்துழைப்பு 3 நாடுகளின் சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும்... மேலும் பார்க்க