செய்திகள் :

டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து; ஹாரி ப்ரூக் காட்டில் வெற்றி மழை!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இதையும் படிக்க:டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டாலில் நேற்று (ஜூன் 8) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகிய பிறகு அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. 11 நாள்கள் இடைவெளியில் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டு தொடர்களை வென்று அசத்தியுள்ளது.

இதையும் படிக்க: நாளுக்கு நாள் தலைமைப் பண்பில் முன்னேற்றமடையும் பாட் கம்மின்ஸ்; முன்னாள் ஆஸி. வீரர் பாராட்டு!

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூன் 10) சௌத்தாம்டானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

அணியை கேப்டனாக வழிநடத்துவது தனக்கு மிகவும் பிடிக்கும் என இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் இந்திய அணி; அறிவுரைகளை அள்ளித் தெளிக்கும் முன்னாள் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளைய... மேலும் பார்க்க

2-வது டி20: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்ட... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷான் மசூத் செயல்பட்டு வருகிறா... மேலும் பார்க்க

2-வது டி20: இங்கிலாந்து பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பிரி... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வ... மேலும் பார்க்க