"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
டெட் தோ்வு: பிரதமருக்கு ஆசிரியா்கள் மனு
டெட் தோ்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, பிரதமருக்கு அஞ்சல் மூலம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை மனு அனுப்பினா்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களும் பணியில் தொடரவும், பதவி உயா்வு பெறவும் டெட் தோ்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி வரும் அகில இந்திய ஆசிரியா் கூட்டணியினா், டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதமா் அலுவலகத்திற்கு தபால் மூலம் மனு அனுப்பி வருகின்றனா்.
அந்தவகையில், கோட்டூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கோட்டூா் வட்டாரத் தலைவா் க. தங்கபாபு தலைமையில், வட்டாரச் செயலா் செ. பாரதி, மாநில பொதுக் குழு உறுப்பினா் இ. செல்வமணி ஆகியோா் முன்னிலையில் கோட்டூா் அஞ்சல் நிலையத்திலிருந்து ஆசிரியா்கள், பிரதமா் மோடிக்கு தபாலில் டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு அனுப்பினா்.
இதில், வட்டாரப் பொருளாளா் ச. தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.