செய்திகள் :

டெல்லி: `நாங்கள் உதவி கேட்டு கத்தினோம்' - தனக்கு நடந்த செயின் பறிப்பு குறித்து தமிழக எம்.பி.சுதா

post image

திருடர்கள், வழிப்பறியில் ஈடுபடுவர்கள் எதிரில் யார் இருக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் இலக்கு வழிப்பறியில் ஈடுபடுவது ஒன்றுதான். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யிடம் டெல்லியில் மர்ம ஆசாமிகள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுரை காங்கிரஸ் எம்.பி சுதா டெல்லியில் காலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சக திமுக எம்.பி.ராசாத்தி சென்று கொண்டிருந்தார். அவர்கள் போலந்து தூதரகம் அருகே நடந்து சென்ற போது அவர்கள் எதிரில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த படி ஒருவர் வந்தார். அந்த நபர் சுதா அருகில் வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சுதா அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

இதனை சற்றும் எதிர்பாராத சுதா அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்தினார். அந்த வழியாக வந்த போலீஸ் கட்டுப்பாட்டு வாகனத்தில் இருந்த போலீஸாரிடம் இது குறித்து புகார் செய்தார். டெல்லியில் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இது குறித்து சுதா ராமகிருஷ்ணன் கூறுகையில், ''நானும் சக திமுக உறுப்பினர் ராசாத்தியும் காலை 6.20 மணிக்கு போலந்து நாட்டு தூதரகத்தின் மூன்றாவது கேட் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்நேரம் அந்த வழியாக எங்களுக்கு எதிரில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

அந்த நபர் ஸ்கூட்டியில் வந்தார். அவர் என் அருகில் வந்ததும் எனது கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். அவன் எனது அருகில் வரும் வரை செயின் பறிப்பவன் என்று நினைக்கவே இல்லை. எனது செயினை பறித்ததில் எனது கழுத்தில் காயம் ஏற்பட்டுவிட்டது. எனது சுடிதார் கூட கிழிந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நான் கீழே விழவில்லை. நாங்கள் உதவி கேட்டு கத்தினோம். அந்நேரம் போலீஸ் வாகனம் வந்தது. அவர்களிடம் புகார் செய்தோம்.

மிகவும் பாதுகாப்பு மிக்க சாணக்கியாபுரா பகுதியில் பெண் எம்.பி. ஒருவரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்தியாவின் தலைநகரில் மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒரு பெண்ணால் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியில் பல தூதரகங்கள் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் உள்ளன. தனது செயினை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சுதா மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

`NRC பயத்தில் முதியவர் விபரீத முடிவு' - மத்திய அரசை சாடும் திரிணாமுல் காங்கிரஸ்

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்பட்டால் தான் திரும்ப வங்க தேசத்துக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் 63 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பள்ளி வளாக கிணற்றுக்குள் மாணவன் சடலம்... கொலையா? - உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவரக்கூடிய `தோமினிக் சாவியோ’ ... மேலும் பார்க்க

சேலம் சிறுமி மாயமான வழக்கு; சிறுமியை குடும்பத்தினரே விற்றார்களா? போலீஸ் தீவிர விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார... மேலும் பார்க்க

15 வயதில் காதல் திருமணம்; உறவில் விரிசல்; கணவனை கொலை செய்து சாக்கடையில் வீசிய மனைவி

டெல்லியில் உள்ள அலிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சோனியா (34). இவரது கணவர் பிரித்தம். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி ஹரியானாவில் உள்ள சோனிப... மேலும் பார்க்க

ஒடிசா: 15 வயது பெண் உயிரோடு எரிப்பு; 'தற்கொலையா? கொலையா?' - பெண்ணின் தந்தை சொல்வது என்ன?

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா என்ற இடத்தில் கடந்த 19ம் தேதி 15 வயது பெண் 75 சதவீத தீக்காயத்துடன் புபனேஷ்வர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு மூன்று பேர் தீ வைத்... மேலும் பார்க்க

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க