திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
டெஸ்ட்டில் தடுமாறும் மிட்செல் மார்ஷ்..!
ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் டெஸ்ட்டில் மோசமாக விளையாடி வருகிறார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டியில் 4 ரன்களுக்கு பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி 13 இன்னிங்ஸில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அவரது கடைசி 13 இன்னிங்ஸில் 229 (4, 2, 5, 9, 47, 6, 80, 0, 0, 40, 10, 21, 5) ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். சராசரி 34ஆக இருக்கிறது.
உடல்நிலை காரணமாக பந்துவீச்சிலும் சுமாரான செயல்பாடுகளை வழங்கிவரும் மிட்செல் மார்ஷ் ஆஸி. அணிக்கு ஒரு சுமையாக மாறி வருகிறார்.
டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டுவரும் மிட்செல் மார்ஷ் டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. அவரது தலைமையிலான ஆஸி. அணி கடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையிலிருந்தே பந்துவீசாமல் இருக்கும் மிட்செல் மார்ஷ் தற்போது ஓரளவுக்கு பந்து வீசுகிறார்.
இருப்பினும் ஆல்ரவுண்டராக மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக குறைவான ஓவர்களே விசுகிறார். இவருக்குப் பதிலாக வெப்ஸ்டரை அணியில் சேர்க்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.
ஆஸி. அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்துள்ளது.