‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?
இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக இந்த வரி தாக்கம் இருந்தது என்றால் அது செப்டம்பர் மாதம் தான். காரணம், ஆகஸ்ட் 22-ம் தேதி தான் அமெரிக்க வரி முழு அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், நேற்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் கடந்த மாதத்தின் இந்தியாவின் வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது.
அந்தத் தரவுகள் இதோ
இந்தத் தரவுகள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மற்றும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை விட, இந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில், இந்தியாவில் ஏற்றுமதி 4.45 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏற்றுமதி 0.78 சதவிகித வளர்ச்சியையும், இறக்குமதி 11.34 சதவிகித வளர்ச்சியையும் கொண்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி
கடந்த மாதம், இந்தியா 67.20 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 83.82 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால், அதன் வர்த்தகப் பற்றாக்குறை 16.61 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உள்ளது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வாகும்.
இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தப் பற்றாக்குறை 8.60 பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது.
அமெரிக்கா உடனான வர்த்தகம்
2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை விட, கடந்த மாதத்திற்கான ஏற்றுமதி 12 சதவிகிதம் குறைந்துள்ளது.
இறக்குமதி ஏன் அதிகம்?
கடந்த மாதம், இந்தியா உரங்களை மூன்று மடங்கு அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
இப்படியான இறக்குமதிகளால் கடந்த மாதத்தின் இறக்குமதியின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது.

Our response to media queries on comments on India’s energy sourcing⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) October 16, 2025
https://t.co/BTFl2HQUabpic.twitter.com/r76rjJuC7A