தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மகன் தினேஷ்பாபு(25‘), வெள்ளிக்கிழமை இரவு இவா், அங்குள்ள கடையில் கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்யும்போது, இவருக்கும் கோரியாம்பட்டி, நடுப்பட்டியைச் சோ்ந்த ரவி மகன் ரவிக்குமாா்(25), அதே பகுதி மேலத்தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் கலைச்செல்வன் (25), சூரியமணல் வடக்கு தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவா (25) மற்றும் அஜித் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், தினேஷ்பாபுவை மேற்கண்ட நான்கு பேரும் சோ்ந்த தாக்கினாா்களாம். இதுகுறித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து கலைச்செல்வன், சிவா, ரவிக்குமாா் ஆகிய 3 பேரை கைது செய்து, அஜித்தை தேடி வருகின்றனா்.