செய்திகள் :

தக் லைஃப் ஓடிடி தேதி இதுவா?

post image

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியானது.

படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.

ஒட்டுமொத்தமாக, இப்படம் உலகளவில் ரூ. 95 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இந்த அங்கீகாரம் என்னைச் செதுக்கியவர்களுக்கு... கமல் ஹாசன் பெருமிதம்!

இந்த நிலையில்,தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இப்படம் திரைக்கு வந்த 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வருவதுபோல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியாகவுள்ளது.

kamal haasan's thug life movie will release on netflix

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் அறிவிப்பு விடியோ எப்போது?

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்... மேலும் பார்க்க

கடும் தோல்வியைச் சந்தித்த கண்ணப்பா!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படம் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27)... மேலும் பார்க்க

அட்டகத்தி படத்தினை விற்க உதவிய வெற்றி மாறனின் சிரிப்பு!

இயக்குநர் வெற்றி மாறன் அட்டகத்தி படத்தினை விற்க அவரது சிரிப்பு உதவியதாக இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகியது. இந... மேலும் பார்க்க

ஓஹோ எந்தன் பேபி டிரைலர்!

விஷ்ணு விஷாலின் சகோதரர் நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய 2 அணிகள்!

கிளப் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு செல்ஸி, பல்மெய்ராஸ் அணிகள் முன்னேறியுள்ளன. ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்து ரவுண்ட் ஆஃப் 16 எ... மேலும் பார்க்க