தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 12) சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் விற்பனையானது. செவ்வாய்க் கிழமையான நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.64,520-க்கும் கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.8,065-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளிவிலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.109-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.