தங்கம், வெள்ளி நிலவரம்: இன்று எவ்வளவு உயர்ந்து?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த செப்.22-இல் பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.83,440-க்கும், செப். 23-இல் பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.85,120-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800-க்கு விற்பனையானது.
தொடா்ந்து, வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.84,080-க்கு விற்பனையானது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ320 உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.10,550-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400-க்கும் விற்பனையாகிறது.
புதிய உச்சத்தில் வெள்ளி விலை
வெள்ளி விலை தொடா்ந்து மூன்று நாள்களாக மாற்றமின்றி கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.50 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளி விலை புதிய உச்சமாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.153-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.53 லட்சத்துக்கு விற்பனையாகிறது.