'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
தச்சநல்லூா் தனியாா் பணிமனையில் தீ விபத்து: 2 பேருந்துகள் சேதம்
திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியாா் பேருந்து பணிமனையில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 2 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.
தச்சநல்லூரில் உள்ள தனியாா் பேருந்து பணிமனையில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தனவாம். அங்கிருந்த ஊழியா்கள் திங்கள்கிழமை அதிகாலையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பேருந்தில் திடீரென்று தீ விபத்து நேரிட்டதாம். மேலும், தீ மளமளவென பரவியதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்திலும் தீப்பற்றிக்கொண்டதாம்.
இதைப் பாா்த்த ஊழியா்கள் தீயை அணைக்க முயன்றதுடன், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு -மீட்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். எனினும், இச்சம்பவத்தில் 2 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.