செய்திகள் :

தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!

post image

நந்திதேவர் சாபம் தீர்த்த தலம்

ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார் நந்திதேவர். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுக்க... அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார். இதனால் கோபம் கொண்ட இருவரும், நந்தியை சபித்தனர். இதால் அவருக்கு தேகமெங்கும் தோல் நோய் உண்டானது.

உடனே சிவனாரிடம் முறையிட்டார் நந்திதேவர். அப்போது ஈசன், ''திருமகள் கடும் தவம் இருந்து, திருமாலின் இதயத்தில் இடம்பிடித்த தலமான நாதன்கோவிலுக்குச் சென்று தவம் செய்தால், சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்'' என வழிகாட்டினார் சிவபெருமான்.

ஸ்ரீராமர்
ஸ்ரீராமர்

அதன்படி, இந்தத் தலத்துக்கு வந்த நந்திதேவர், திருமாலை எண்ணிக் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த பெருமாள் அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், சாபத்தையும் போக்கியருளினார். அப்போது திருமாலிடம் நந்திதேவர்,

''என்னைப் போலவே தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து தங்களைத் தரிசித்தால், அந்த நோயைத் தாங்கள் தீர்த்தருள வேண்டும். இதன் நினைவாக, இந்தத் திருத்தலம் அடியேனின் பெயரால் அழைக்கப்படவேண்டும்'' என வேண்டுகோள் விடுக்க... 'அப்படியே ஆகட்டும்' என அருளினார் பெருமாள்.

அதன்படி, இங்கே வந்து வேண்டிக்கொண்டால் தோல் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கே, மனித உருவில் நந்திதேவர் கருவறையிலேயே தரிசனம் தருவது சிறப்பு.

மங்களாசாசனம் பாடிய திருமங்கையாழ்வார்

இப்படிப்பட்ட அற்புதமாக கோயிலை உருவாக்கியவர் ராஜராஜப் பெருவுடையார். அந்த அளவுக்கு, ஈசன் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார் மன்னர். இருப்பினும், தன் தேசத்து மக்களுக்காகவும், சைவமும் வைணவமும் இணைந்து தழைக்க வேண்டும் என்பதற்காகவும் அற்புதமான வைணவ ஆலயம் ஒன்றைக் கட்டினார் அவர்.

இந்த ஆலயம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நாதன்கோவில். ராஜராஜசோழன் எழுப்பிய இந்தக் கோயிலில் இருந்தபடி இன்றைக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் பெருமாள்.

இங்கு, மூலவரின் திருநாமம் - 'ஸ்ரீவிண்ணகரப் பெருமாள்; ஸ்ரீநாகநாதர்' என்றும் அழைப்பர். கருவறையில், இவருக்கு முன்னே, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீஜெகந்நாதபெருமாள் எனும் திருநாமத்துடன் உற்சவரும் காட்சி தருகிறார்.

ஸ்ரீபிரம்மா, திருமாலின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதத் தலம் இது. 'நாளும் நந்தி பணி செய்த விண்ணகரம் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே' என்று, மங்களாசாசனம் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.

மனித உருவில் நந்தி கருவறையில்
மனித உருவில் நந்தி கருவறையில்

ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம்

ஒருமுறை தாயார் பெருமாளிடம் "என்னை உங்கள் மார்பில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என வேண்டுகிறாள்.

பெருமாள் அதற்கு "நீ பூலோகத்திற்குச் சென்று எனக்காகக் காத்திரு, நான் அங்கு வந்து உன்னை ஏற்றுக்கொள்கிறேன்" என்கிறார்.

அதன் படி தாயாரும் இந்த பழையாறை நந்திபுரத்திற்கு தை அமாவாசை நாளன்று வந்து செண்பகவல்லி தாயாராக ரூபம் கொண்டு பெருமாளையே எண்ணிக் காத்திருக்கிறாள்.

தாயாருக்குக் கொடுத்த வாக்கின் படி பெருமாள் ஜெகந்நாதனாக உருவம் பெற்று ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை (அதாவது ஐப்பசி மாத அஷ்டமி) நாளன்று தாயாரை தன்னோடு சேர்த்துக்கொள்கிறார்.

பெருமாள் தாயாரை ஏற்றுக்கொண்ட நாளான ஐப்பசி மாத அஷ்டமி நாளை ஒவ்வொரு ஆண்டும் அஷ்டமி திருவிழாவாக இந்தக் கோயிலில் கொண்டாடுகின்றனர்.

திருமாலின் இதயத்தில் இடம்பிடிக்க, செண்பக மரத்தடியில் ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம் இது என்பதால், இங்குள்ள மரத்தடியில் ஸ்ரீசெண்பகவல்லித் தாயாராக, கிழக்குப் பார்த்த சந்நிதியில், தபசுத் திருக் கோலத்தில் காட்சி தருகிறாள் தாயார்.

சுக்லபட்ச அஷ்டமி வழிபாடு

சுக்லபட்ச அஷ்டமி நாளில், இங்கு ஸ்ரீசூக்த ஹோமம் சிறப்புற நடைபெற்றுகிறது. தொடர்ந்து எட்டு சுக்லபட்ச அஷ்டமி நாள்களில் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசூக்த ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீசெண்பகவல்லித் தாயாரை தரிசித்து வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; திருமணத் தடை அகலும்; கஷ்டங்கள் யாவும் விலகும்; சந்திர மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும்; லட்சுமி கடாட்சமாக வாழலாம் என்பது ஐதிகம்.

பொன்னியின் செல்வன் நாவலில் வரும்..

கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் இத்தலத்தில் தான் ஆழ்வார்கடியான் குந்தவை தேவியையும் செம்பியம் மாதேவியையும் வானதி தேவியையும் சந்திப்பதாக எழுதியிருப்பார்.

ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்
ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்

வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியைச் சந்திக்க வந்த நாளன்று கிருஷ்ண ஜயந்தி. திருவிழாக் கோலமாக பழையாறையில் இருக்கும் நந்திபுர விண்ணகர கோயிலைச் சுற்றியே அனைத்து விழாக்களும் நடைபெறும்.

அந்தக் கோயிலின் வாசலில் நின்றுதான் ஆழ்வார்க்கடியான், 'கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியானை கண்டேன்' என்று பாடி சலசலப்பை ஏற்படுத்துவார். அதைக் கண்டே செம்பியன் மாதேவியும் குந்தவை தேவியும் வானதி தேவியும் ஆழ்வார்க்கடியானிடம் பேசுவார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டு திருப்பதி: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; பிரமோற்சவத்திற்குத் தயார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு... மேலும் பார்க்க

வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்; காலபைரவ மகாபூஜையின் நன்மைகள்; சங்கல்பியுங்கள்!

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் காலபைரவ மகாபூஜை நடைபெற உள்ளது. வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்! பைரவ ப... மேலும் பார்க்க

நெல்லை, மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணர்: ஜாதகத்தை வைத்து வேண்டினால் கல்யாண வரம் தரும் புருஷோத்தமர்!

மன்னார்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில். பசுமையும் எழிலும் கொஞ்சும் இந்த பூமியில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

திருப்பதி கோயில்: 3 கிலோ 860 கிராம் தங்கப் பூணூல் காணிக்கை; அதன் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி கோயிலில் காணிக்கையாக பணம், நகைகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.ஆனால், நேற்று (செப். 24) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் புவ்வாடா மஸ்தான் ராவ் - ரேகா தம்ப... மேலும் பார்க்க

திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் தொல்லைகள் நீங்கும்!

தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம். இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண... மேலும் பார்க்க

நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் கோயில் - இந்தியாவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரத்தில் உள்ள ஒரு கோயில், நவராத்திரி பண்டிகையின் 9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோய... மேலும் பார்க்க