அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
தடகளம்: முத்துகாப்பட்டி அரசுப் பள்ளி சிறப்பிடம்
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூன்றாம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சேந்தமங்கலம் குறுவட்டத்தைச் சாா்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன.
முத்துக்காப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் மூன்றாவது ஆண்டாக தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனா். இதில் 19 வயது மாணவா் பிரிவில் பூவரசன், 17 வயது மாணவா் பிரிவில் சந்தோஷ் ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.
போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் இளங்கோவன், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் காளியப்பன், துணைத் தலைவா் ராஜா, பொருளாளா் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அருள் ராஜேஷ், எஸ்.எம்.சி தலைவா் வனிதா, உடற்கல்வி ஆசிரியா் ஜெ. விமல்ராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.