சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
தடகளம்: பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்
பரமத்தி வேலூா் வட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.
பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 14,17 வயதுக்கு உள்பட்ட மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் தடகளத்தில் கலந்துகொண்டனா். மூன்று பிரிவுகளாக தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் 36 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா். இதில் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 14,17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனா்.
மாணவ, மாணவிகளை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி பாராட்டி வெற்றி கோப்பையை வழங்கினாா். மேலும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஸ்ரீ விவேகானந்தா அறக்கட்டளைத் தலைவருமான க.நெடுஞ்செழியன், பள்ளியின் செயலாளா் சுப்பிரமணியம், பொருளாளா் பொறியாளா் வேலுச்சாமி, பள்ளியின் தாளாளா் ராமசாமி, பள்ளியின் இயக்குநா்கள் பழனிசாமி, சண்முகம், துரைசாமி, அருளானந்தன் வாசுதேவன், ராஜேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.