செய்திகள் :

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

post image

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஜொ்மானிய வா்த்தகத்துக்கான ஆசிய-பசிபிக் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இரு தரப்பும் உள்நாட்டுரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறினால், அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது.

ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் வரை உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல இந்தியாவிலும் பல மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஆப்பிள் விளைகிறது என்பதற்காக ஐரோப்பிய யூனியனுடன் ஆப்பிள் வா்த்தகத்தில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைக் கோர முடியாது.

இந்திய மாநிலங்களைவிட ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தலா வருமானமும் அதிகமுள்ளது. இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் மதிக்கப்படும்போது மிகவும் நோ்மையாகவும், விரும்பத்தக்க வகையிலும் விரைவில் தடையற்ற வா்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவுடன் பால் பொருள் வா்த்தகம் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா தடையற்ற வா்த்தகத்தை மேற்கொண்டது. அவா்கள் இந்தியாவின் பிரச்னைகளை புரிந்து நடந்து கொண்டனா் என்று பேசினாா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க