2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!
தடை செய்யப்பட்ட 2 தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தகர்ப்பு!
மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட 2 தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் தடைச் செய்யப்பட்ட 2 தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து தகர்த்துள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட கங்ளேய் யவொல் கன்னா லூப் (KYKL) எனும் தீவிரவாத அமைப்பின் ரகசிய முகாம் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மகவ் பவுரபி எனும் இடத்தில் நேற்று (டிச.18) கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால் தகர்க்கப்பட்டது.
அங்கிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு செல்போன் மற்றும் குண்டு துளைக்காத தலைக்கவசம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், மகவ் பவுரபியில் செயல்பட்டு வந்த வேறொரு தடைசெய்யப்பட்ட அமைப்பான ப்ரேபாக்கின் (PREPAK) பயிற்சி முகாம் ஒன்றும் நேற்று தகர்க்கப்பட்டதில் ஒரு துப்பாக்கி, 5 போலித் துப்பாக்கிகள், 2 வாக்கி டாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
முன்னதாக மணிப்பூரில் மக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற தடைசெய்யப்பட்ட போராளி குழுவான மக்கள் போர் குழுவைச் சேர்ந்த 9 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.