செய்திகள் :

தண்டராம்பட்டு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.98,900 பறிமுதல்

post image

தண்டராம்பட்டு சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில், கணக்கில் வராத ரூ.98 ஆயிரத்து 900 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தண்டராம்பட்டு சாா் -பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளா் அருள்பிரசாத், உதவி ஆய்வாளா் கோபி உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் திடீரென உள்ளே நுழைந்தனா்.

பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தவா்கள், பத்திர எழுத்தா்கள், பத்திரப்பதிவு அலுவலக ஊழியா்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், கணக்கில் வராத ரூ.98 ஆயிரத்து 900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சாா் - பதிவாளா் கதிரேசன் மற்றும் அலுவலா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி

வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்த... மேலும் பார்க்க

மதுக்கடை சுவரை துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு

வந்தவாசி அருகே மதுக்கடை சுவரை துளையிட்டு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த அய்யவாடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் க... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி உள்ளிட்ட 2 போ் கைது

வந்தவாசி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கொழப்பலூா் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசிக பெரணம... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்... மேலும் பார்க்க

விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வேளாண் பல்கலை.துணையாக இருக்கும் -துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் என்று அப்பல்கலை.யின் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யின் திறந்தவெளி மற்... மேலும் பார்க்க