ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட கற்குடியில், தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.
செங்கோட்டை அருகே வல்லம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிராஜ். இவரது மனைவி திவ்யா. இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகின்றன. இவா்களது 2ஆவது மகன் விஷால் (ஒன்றரை வயது). திவ்யா கற்குடியில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளாா். அவா் திங்கள்கிழமை தனது மூத்த மகனை வீட்டுக்குள் வைத்தும், விஷாலை வாசலில் வைத்தும் உணவு ஊட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, மூத்த மகனுக்கு உணவு ஊட்டிவிட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த தண்ணீா்த் தொட்டியில் விஷால் தலைகீழாகக் கிடந்தானாம்.
உடனடியாக விஷாலை மீட்டு செங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், புளியறை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளா் செந்தில் விசாரணை மேற்கொண்டாா்.