செய்திகள் :

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

post image

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார்.

இதற்கிடையில், அவர் ஐ.சி.யூ-வில் இருந்ததால் நேரில் சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி பேசியிருந்தார் .

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸைச் சந்தித்த ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்
ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

இந்த நிலையில், ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் ராமதாஸ், ``இடையில் சில வாரங்கள் உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்திக்க முடியவில்லை என்றாலும், இனி தொடர்ச்சியாக நாம் சந்திப்போம்.

12 வருடங்களுக்கு முன் எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரத்தக் குழாய்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சமீபத்தில் அப்போலோவில் நானே சேர்ந்திருந்தேன்.

மருத்துவர்கள், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறி அப்போதே அனுப்பிவிட்டார்கள். ஒருநாள் மட்டும் இருந்துவிட்டு மறுநாளே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.

ஒன்றிரண்டு பேரைத் தவிர தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி, இயக்க பேதமின்றி நேரில் வந்தும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தார்கள்.

இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி மட்டும் வரவில்லை. மருத்துவமனையில் எல்லோரும் பார்க்கும்படியாகத்தான் இருந்தேன்.

ஐ.சி.யூ-வில் நான் இல்லை. ஆபத்தான நிலையில் இருந்தால்தான் ஐ.சி.யூ-வில் சேர்ப்பார்கள். அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவில்லை.

ராமதாஸ் - பாமக
ராமதாஸ் - பாமக

ஒரு கும்பலுக்குத் தலைவராக இருப்பவர் பேசிய பேச்சுக்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கும்.

`அய்யாவுக்கு எதாச்சும் ஆச்சுன்னா தொலைச்சிடுவேன். நாடகமாட்றீங்களா, அய்யா உடல்நலத்துடன் இருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார். படிக்காத மாடு மேய்க்கின்ற சிறுவன் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கொட்டியிருக்க மாட்டான்.

அதனால்தான் இவருக்குத் தலைமைப் பண்பு இல்லை என்று கூறியிருந்தேன்.

பா.ம.க-வை தோற்றுவித்தது நான். உழைப்பு என்னுடையது. ஆனால், இப்போது என்னுடைய கட்சி என்று அவர் சொல்வதில் எந்தவித நியாயமுமில்லை. அப்படிச் சொல்லவும் கூடாது.

தேர்தல் கமிஷன், கோர்ட் எல்லாவற்றையும் சந்திப்போம். இதெல்லாம் நடக்கும் என்று கட்சி ஆரம்பித்தபோது எனக்குத் தெரியாது. ஆரம்பித்த பிறகும் எனக்குத் தெரியாது.

இப்போதும் சொல்கிறேன் பா.ம.க-வுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பாமக தலைவர் அன்புமணி
அன்புமணி

ஒரு தனி கட்சி ஆரம்பிச்சிக்கோ, அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருக்கும் சில பேருக்கும் நல்லது.

என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டுமானால், உடனடியாக ஒருவாரத்துல தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ.

ஆர். அன்புமணி-னு இனிஷியல் வேணும்னா போட்டுக்கலாம். அதுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழுவில், முடிவெடுக்கின்ற அதிகாரத்தை எனக்கு கொடுப்பார்கள். மக்கள் மற்றும் கட்சியினர் நினைக்கும் முடிவை நான் எடுப்பேன்" என்று கூறினார்.

‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan | Karur Stampede

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும்... மேலும் பார்க்க

கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ... மேலும் பார்க்க

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சே... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க