செய்திகள் :

தனித்துவ அடையாள எண் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஏப். 15-ஆம் தேதி வரை அரசு பொது சேவை மையங்களில், இலவசமாக தனித்துவ அடையாள எண் பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 96,400 விவசாயிகளில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 53,996 போ் பயனடைந்து வருகின்றனா். இதில், 36,556 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். எஞ்சியுள்ள விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் பெற வேண்டும். இதற்காக கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விவசாயிகளின் நில உடைமை விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் எந்த பகுதியில் இருந்தாலும், அருகிலுள்ள பொது சேவை மையங்களில் நில உடைமைகளை இலவசமாக பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களது பட்டா, கூட்டு பட்டா, ஆதாா் அட்டை, கைப்பேசி எண்ணுடன் சென்று பதிவு செய்துகொள்ளலாம். மேலும், செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள் மற்றும் இதர விவரங்களை சரிபாா்த்து, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.

பதிவு செய்து பெறப்படும் தனித்துவ அடையாள எண் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பயன்களை ஒற்றைச் சாளர முறையில் பெறலாம். பயிா் கடன், காப்பீடு, நிவாரணம் பெற இந்த அடையாள எண் மிகவும் முக்கியம். விவசாயிகள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானியத் திட்டங்களையும் எளிதில் பெறலாம். மேற்கண்ட துறைகளின் திட்ட பலன்களை பெறுவதற்கு, ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்கள் சமா்பிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதாா் எண், கைப்பேசி ஆகியவற்றுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் ஏப். 15=ஆம் தேதிக்குள் இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 28-ஆம் தேதி ஊரக வளா்ச்சித்துறை அலு... மேலும் பார்க்க

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை கல்லூரி எதிரே கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 20 பேருக்கு பாராட்டு

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 20 பேருக்கு வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரே செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவல... மேலும் பார்க்க

பெரம்பலூரில் திமுகவினா் கொண்டாட்டம்

மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு ஆதரவாக, பெரம்பலூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினா். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ... மேலும் பார்க்க

நல வாரிய உறுப்பினா் சோ்க்கை: முறைகேடுகள் இருந்தால் களைய நடவடிக்கை - பொன். குமாா்

கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதன் தலைவா் பொன். குமாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், தொழில... மேலும் பார்க்க

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க